சிம்ம ராசி அன்பர்களே…! இன்று சிந்தனைகள் வெற்றிபெற குலதெய்வத்தை கண்டிப்பாக வழிபட்டு தான் ஆக வேண்டும். தொழில் வளர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவி செய்பவர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.உதோயோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும்.
புதிதாக வேலை தேடுபவர்களுக்குஅலைச்சல் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்பட்டாலும் தந்தைவழி உறவுகள் மூலம் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க கூடும். கூடுமானவரை இறைவழிபாட்டை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள். அதே போல இப்போதைய புதிய முயற்சிகளை கண்டிப்பாக தள்ளிப்போடுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ள மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சரிசெய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.