சிம்ம ராசி அன்பர்களே…! இன்று வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும் நாளாக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சொத்துக்களால் வந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பப் பிரச்சினைகளில் சாதகமான முடிவு ஏற்படும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
வாகனத்தில் செல்லும்போதும் பயணங்களின் போதும் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். திறமையால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். கஷ்டமான வேலைகளையும் இன்று துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். காதலர்களுக்கு ஏற்ற நாளாக அமையும், திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். இன்று கொடுக்கல் வாங்கல் நல்லபடியாகவே இருக்கும்.
சிலர் தேவையில்லாத விஷயத்திற்காக தலையிட வைப்பார்கள், அதனால் அவரிடம் மட்டும் தயவு செய்து விலகியே இருங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.