சிம்ம ராசி அன்பர்களே…! இன்று குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னர் செய்த பணி நல்ல பலனைக் கொடுக்க ஆரம்பிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படும். திடீர் செலவுகள் இருக்கும். சிலருக்கு மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும்.
வீட்டை விட்டு வெளியில் தங்கலாமா என்ற சூழலும் இருக்கும். தொழில் வியாபாரம் நிதானமாகவே நடக்கும். சிறிய மாற்றங்கள் நிகழும் கடன் விவகாரங்களில் ரொம்ப கவனமாக இருங்கள். தயவுசெய்து தொழில் தொடர்பான காரியங்களில் ரொம்ப கவனமாக இருங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்பத் தீவிரமாக செயல்பட வேண்டும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம்.
உடல் ஆரோக்கியத்தில் ஒரு கண் இருக்கட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.