சிம்ம ராசி அன்பர்களே …! தயவுசெய்து அடுத்தவர் விஷயத்தில் மட்டும் நீங்கள் கருத்துக்கள் எதுவும் சொல்ல வேண்டாம். மற்றவர்களுக்கு எந்தவித அறிவுரைகளையும் கூற வேண்டாம். தொழில் வியாபாரத்தில் வருகின்ற இடையூறுகளை தயவுசெய்து சரி செய்துவிடுங்கள். எதிர்பார்த்த பணவரவு ஓரளவு இருக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவார்கள். இன்று குழந்தை பாக்கியம் கிட்டும்.
வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு மனை ஆகியவற்றை வாங்கக்கூடிய சிந்தனை மேலோங்கும். ஒருமுறைக்கு இருமுறை எதையும் விசாரியுங்கள் விசாரித்து காரியங்களைச் செய்யுங்கள். முடிந்தால் பெரியோரிடம் கொஞ்சம் கருத்துக்களை கேட்டு பின்னர் காரியங்களில் ஈடுபடுவது மிகவும் சிறப்பு. நண்பர்கள், உறவினர்கள் அன்னியமாக இருப்பார்கள். கொடுத்த வாக்கை இன்று நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள்.
புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து தள்ளிப் போட்டு விடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.