Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…உற்சாகம் கூடும்…வெற்றி உண்டாகும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!      உற்சாகத்தோடு பணிபுரியும் நாளாக இருக்கும். திருமண முயற்சி வெற்றியை கொடுக்கும். சருமத்தை பாதுகாக்க சிறு தொகையை நீங்கள் செலவிட வேண்டியிருக்கும். திட்டமிட்ட காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். உங்களுக்கு நன்மைகள் பல வகைகளில் வந்துசேரும். தொட்ட காரியம் அனைத்திலும் நன்மை கிடைப்பதால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.

நல்ல வருவாயையும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை இருக்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்களுக்கு இன்று பேச்சுவார்த்தை நடக்கும். இதனால் உங்கள் மனம் மகிழும். மாலை நேரங்களில் மட்டும் இசைப் பாடலை ரசியுங்கள் மனம் அமைதியாக இருப்பதற்கு உதவும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

புதிதாக கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், ஒரு குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |