Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…சிந்தனை மேலோங்கும்…ஆதாயம் கூடும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!   இன்று தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சிந்தனை மேலோங்கும். அரசால் ஆதாயம் வெற்றி கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும் நாளாக இருக்கும்.

வாடிக்கையாளரிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அவர்கள் கூறும் ஆலோசனைகளை மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருங்கள். கூடுமானவரை மற்றவர்களுக்கு நீங்கள் அறிவுரை ஏதும் கொடுக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிஷ்ட  நிறம்: சிவப்பு மற்றும் இளம்மஞ்சள் நிறம்.

Categories

Tech |