Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…பொருள் சேர்க்கை உண்டு…எண்ணம் மேலோங்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாளாக இருக்கும். அஞ்சல் வழியில் ஆச்சரியமான தகவல் ஒன்று வந்து சேரும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உருவாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும்.

தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று எதையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். அதேபோல இன்று நெருங்கிய உறவினர் இடமும், நெருங்கிய நட்பு மத்தியிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்கள் பேச்சில் நிதானம் இருந்தால் அனைத்தும் சரியாகிவிடும். மக்களிடம் அன்பு பாராட்டுவது ரொம்ப நல்லது.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பாகும். இளமஞ்சள் உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அனுமதி கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்க பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |