Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…மனக்கசப்பு நீங்கும்…நிதானம் தேவை…!

சிம்ம ராசி அன்பர்களே…!    இன்று பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். உழைப்பால் உயரும் நாள். இனிமையான செய்திகள் தேடி வரும்.

நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவியும் கிடைக்க பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத சில பிரச்சினைகள் உண்டாக கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. பேசும் போது ரொம்ப நிதானமாகப் பேசுங்கள். எப்போதுமே எல்லோரிடமும் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். உறவினர்கள் தொல்லைகள் இருந்தாலும் இது அன்புத் தொல்லையாக தான் இருக்கும். மற்றவர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள்.

கொஞ்சம் கவனமாகவே மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும். சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண் :5 மற்றும் 8

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |