சிம்ம ராசி அன்பர்களே…! இன்று அதிக பணியின் காரணமாக நேரத்திற்கு உணவு அருந்த முடியாத நிலை இருக்கும். கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் திறம்படவே நீங்கள் செய்வீர்கள். குடும்பத்தோடு அன்பாக நடந்து கொள்வீர்கள். பயணங்களின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மற்றவர்களுக்கும் சரக்குகளை அனுப்பும் பொழுது கவனமாக தான் இருக்க வேண்டும். நல்ல வாகன யோகம் நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பினால் ஏற்படும்.
மன மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். செலவு ஏற்பட்டாலும் சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் செல்லும். எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள் இல்லம் தேடி வரக்கூடும். மனதில் தன்னம்பிக்கை கூடும். காதலருக்கு இனிமையான நாளாக இருக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள்.
நிதானத்தை மட்டும் எப்போதும் இழந்து விடாதீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.