சிம்ம ராசி அன்பர்களே…! இன்று உங்கள் செயல்களில் தடுமாற்றங்கள் கொஞ்சம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனையின் நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நடைபெறும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். பொருட்களை இரவல் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
மனதில் தேவையற்ற சஞ்சலம் அவ்வப்போது வந்து செல்லும். கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு பணவரவு நல்லபடியாகவே இருக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு வெற்றிகள் குவியும். மன தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றியும் காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இருந்தாலும் எப்போதும் போலவே கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் சுகமாகவே இருக்கும்.
காதலர்களுக்கும் இன்று சில சில சண்டைகள் மட்டும் வந்து செல்லும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.