சிம்ம ராசி அன்பர்களே…! வருமானம் வரும் வழியை கண்டு கொள்ளும் நாளாக இருக்கும். தனிப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களுக்குள் இன்று சிலர் பேச்சுவார்த்தையின்போது விரோதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இந்த விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனமாக இருங்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கைகூடும்.
உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டு அனுசரித்துச் செல்வார்கள். அதனால் உங்களுக்கு மனம் உற்சாகமாக காணப்படும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக காதலில் வயப்படக் கூடிய சூழல் இருக்கும். அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று வெளிவட்டாரத்தில் மதிப்புக் கொடுப்பது, மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்வது என்று குறிக்கோளாக வைத்துக் கொள்வீர்கள்.
பொது நலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சமூக அக்கறையுடன் செயல்படுவீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.