சிம்ம ராசி அன்பர்களே…! கடன்கள் அனைத்தும் பைசலாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பதுதான் ரொம்ப நல்லது. அவர்களது முன்னேற்றத்திற்காக நீங்கள் பாடுபடுவீர்கள்.
பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் புதிய நபரிடம் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். நிதி மேலாண்மையில் கூட கொஞ்சம் கவனமாக இருங்கள். புதியதாக இப்போதைக்கு கடன் வாங்க வேண்டாம். பொறுமை காப்பது ரொம்ப அவசியம். முடிந்தால் குலதெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு காரியங்களை செய்யுங்கள் மிக சிறப்பாக இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்க பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.