Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…தனலாபம்உண்டு… மதிப்பு கூடும்…!

சிம்ம ராசி அன்பர்களே …!     இன்று மறைந்து கிடந்த திறமைகள் அனைத்தும் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அதில் எதிர்பாராத தனலாபம் இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள், நன்மைகள் இருக்கும்.

உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் வருவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபாடு  தோன்றும். உச்சத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் பெறலாம்.

உடல் ஆரோக்கியம் சீராகி மனமகிழ்ச்சி ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை.

Categories

Tech |