சிம்ம ராசி அன்பர்களே…! நீண்ட பயணத்தால் பலன் கிடைக்கும் நாள் ஆகியிருக்கும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். தொழில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். ஆனால் இன்று திடீர் கோபம் கொஞ்சம் கூடும். மற்றவரிடம் அனுசரித்துச் செல்லுங்கள் நன்மையை கொடுக்கும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். எதிலும் திருப்தியான நிலை இருக்கும். பயணம் சாதகமாக அமையும். கடிதப் போக்குவரத்து கூட நன்மையை கொடுக்கும். இன்று உடல் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இன்று காதலர்களுக்கு பேசும்போது கொஞ்சம் கவனத்துடன் தான் பேசவேண்டும்.
கூடுமானவரை திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம் நட்சத்திர பலன்கள்