சிம்ம ராசி அன்பர்களே…! எதிர்பாராத பண வரவு இருக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனை யாகும். முகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாளாக இருக்கும்.
நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். மனமும் தைரியமாக காணப்படும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். ஆசைகள் மட்டும் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். மன கஷ்டம் குறையும். ஆனால் செலவுகள் மட்டும் கட்டுக்கடங்காமல் செல்லும். இடம் மாற்றம் போன்றவை நிகழலாம் பார்த்துக் கொள்ளுங்கள்.
மக்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக தான் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது நல்லது . அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.