சிம்ம ராசி அன்பர்களே…! இன்று வாழ்க்கை முன்னேற்றத்துக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உண்மை நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கக் கூடும். இன்று காரிய வெற்றி உண்டாகும். மனதில் மகிழ்ச்சி கூடும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
உங்களுடைய பொருளாதாரமும் இன்று சீராக உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியமும் நல்லபடியாகவே இருக்கும். உங்களை நம்பி வந்தவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணமும் இன்று இருக்கும். இன்று சமூக அக்கறையுடன் காரியங்களை எதிர் கொள்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்