Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…தடைகள் ஏற்படும் …வெற்றி உண்டு …!

சிம்ம ராசி அன்பர்களே …!   இன்று உங்கள் பாதையில் தடைகளும் தடங்கல்களும் கொஞ்சம் ஏற்படும். எல்லா திசைகளிலும் ஏற்படும் போட்டியின் காரணமாக வியாபாரத்தில் ஆதாயம் குறையும். மனைவியின் செயலால் உறவினர்கள்  பகைமாற  சாதகமான பலன் பெறும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின்போது கவனமாக இருங்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உங்களது நடவடிக்கைகள் மேலதிகாரிக்கு திருப்தியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சிறு உதவிகளை நீங்கள் பெறலாம். அரசியல் துறையினருக்கு காட்சியில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகையால் நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள் தொண்டர்களை அனுசரித்து நடந்துக் கொள்ளுங்கள். காதலர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பேசும் பொழுது கொஞ்சம் ஆலோசனை செய்து பேச வேண்டும்.

வாக்குவாதத்தில் மட்டும் எப்போதும் ஈடுபட வேண்டாம். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் நீங்கள் வாங்க கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |