சிம்ம ராசி அன்பர்களே…! இன்று நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும். நேசித்தவர்கள் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் பொழுது கவனம் இருக்கட்டும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும்.
கட்டுப்பாட்டுடன் இருப்பது ரொம்ப நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யுங்கள் வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. குடும்பத்தில் வாக்குவாதங்களைத் கோபத்தையும் தவிர்த்துவிட்டால் போதும் வாழ்க்கை துணையுடன் அனுசரித்துச் சென்றால் அனைத்து விஷயங்களுமே மிக சிறப்பாக நடக்கும்.
இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.