சிம்ம ராசி அன்பர்களே…! இன்று சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும் நாளாக இருக்கும். சுற்றத்தார்களின் உதவி இருக்கும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக முடியும். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும், வாக்குவாதம் போன்றவை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கூட ஏற்படலாம். விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது.
சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க பாதுகாப்பான இடங்களுக்கு கிடைக்கும். இன்று இடம்பெயர்வுகள் நட்பால் ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருந்தாலும் சகோதரர்களிடம் கொஞ்சம் ஒற்றுமை காண்பது கொஞ்சம் கடினம். அவரிடம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். தந்தையாரின் உடல் நிலையில் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள். தேவையில்லாத உணவுகளை உட்கொண்டு விட்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
காதலர்களுக்கு ஓரளவே இனிமை காணும் நாளாக இருக்கும். பேசும்பொழுது நிதானம் கண்டிப்பாக வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.