சிம்ம ராசி அன்பர்களே…! இன்று காரியங்கள் அனைத்தும் கைகூடும். காதல் கைகூடி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சாதுரியமான இனிமையான பேச்சால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். உறவினர்கள் அக்கம் பக்கம் வீண் வாக்குவாதத்தை மட்டும் தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.
தேவையில்லாத விஷயத்தை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். இன்று உறவினரிடம் எந்தவித வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். தூர தேசத்து பயணங்கள் செல்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதே போல நிதி மேலாண்மையில் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம் கவனமாக இருங்கள்.
கணவன் மனைவி எதையும் பேசி தீர்த்துக் கொள்வது மிகவும் சிறப்பு. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.