சிம்ம ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய செயல்களில் நியாயம் நிறைந்து காணப்படும். பலரும் உங்கள் மீது நல்லெண்ணம் கொள்வார்கள். தொழில் வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றத்தையும் கொடுக்கும். கூடுதல் பணவரவு இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்டு மகிழ்வர். குடும்ப ரீதியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றியை கொடுக்கும்.
பெண்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றியும் பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பொழுது கவனமாக இருங்கள். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது ரொம்ப நல்லது.
காதல் இன்றைய நாளில் பொறுமை காக்க வேண்டும். பேசும் போது கண்டிப்பாக நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ள நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.