சிம்ம ராசி அன்பர்களே…! இன்று சிலர் உங்களை ஏளனமாக பேசுகின்ற சூழ்நிலை உருவாகும். முக்கிய பணியை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். முக்கிய செலவுகளுக்காக கொஞ்சம் கடன் பெறுவீர்கள். உணவு உண்பதில் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நல்ல விஷயங்கள் நடக்கும். சில நேரங்களில் பயணங்களை தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது. பயணங்கள் கொஞ்சம் அலைச்சல் கொடுப்பதாகவே இருக்கும்.
திட்டமிட்டு பயணங்களை மேற் கொள்ளுங்கள். நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். தேவையில்லாத விஷத்திற்கு மட்டும் கோபப்பட வேண்டாம். குடும்பத்தாரிடம் கொஞ்சம் அன்பாக நடந்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தந்தையாரின் உடல் நலனில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
தந்தையிடம் எந்தவித வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.