Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…மகிழ்ச்சி உண்டாகும்… திடீர் செலவுகள் ஏற்படும்…!

சிம்ம ராசி அன்பர்களே …!     அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்துமே அனுகூலமாக முடியும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாளாக இருக்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களிலும் உற்சாகமும் அனுகூலமும் ஏற்படும். கொஞ்சம் பிரச்சனை இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

எந்த ஒரு வேலையும் செய்யும் முன் நல்லது, கெட்டதை அறிந்து செய்வது நல்லது. பிரச்சனையும் சமாளித்து விடுவீர்கள். நண்பர்கள் மூலமும் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணங்களில் கவனம் இருக்கட்டும். இனிமையான பேச்சால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். அதேபோலவே வசீகரமான பேச்சால் கதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |