Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…மனக்கசப்புகள் நீங்கும்…சிந்தனை மேலோங்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே …!     இன்று தொலைபேசி மூலம் உங்களுக்கு பொன்னான தகவல்கள் வந்துசேரும். நண்பர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிதாக வாகனம் வாங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். விடாமுயற்சியுடன் சில காரியங்களை செய்து சாதகமான பலனை அடைவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி செல்லும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாகும் நடக்கும். தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த குறைவு நீங்கும். இன்னால் ஓரளவு உற்சாகமாகவே காணப்படுவீர்கள். காதலுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு மற்றும் இளம்பச்சை நிறம்.

Categories

Tech |