சிம்ம ராசி அன்பர்களே …! இன்று பூமி வாங்கும் முயற்சி கைகூடும் நாளாக இருக்கும். ஏதேனும் இடமாற்றங்கள் செய்யலாமா என்ற சிந்தனை இருக்கும். பொருளாதார நிலையும் உயரும். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவதற்கு முன் வருவார்கள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாளாக இந்நாள் இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
கவனமாக செயல்படுவது எப்போதும் நல்லது.வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உச்சத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் தேடி வரும். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். சகோதரர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.அக்கம் பக்கத்தினரிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்.
இன்று காதலில் வயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாகவே அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு.