Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…கடன் தொல்லை நீங்கும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

சிம்ம ராசி அன்பர்களே…!    இன்று உயர்ந்த செயல்களால் புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் மனநிறைவை ஏற்படுத்தும். உபரி வருமானம் கிடைக்கும். எளிய பொருட்களை வாங்கும் எண்ணம் உண்டாகும். குடும்பத்துடன் உறவினர் இல்லம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்ப கஷ்டம் கடன் தொல்லை படிப்படியாக சரியாகும். வாழ்க்கையை முன்னேற்றப் பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். உங்களுடைய பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது நல்லது. பணவரவு காரியத்தடை நீங்கி, எதிலும் விழிப்புணர்வுடன் இருங்கள். இன்று காதலர்கள் ஓரளவு நன்மை காணும் நாளாகவே இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |