சிம்ம ராசி அன்பர்களே …! இன்று பலவழிகளிலும் உங்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். எல்லா வகையிலுமே நன்மையும், கௌரவம், மரியாதை கூடும். பெண்களின் பூரண ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பிரிந்து இருந்தவர் தேடி வந்தால் மனமகிழ்ச்சி கொள்வார்கள். தியானம் செய்து மனதை நிம்மதியாக வைத்துக்கொள்ளுங்கள். இன்று தடை தாமதம் விலகி ஓரளவு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருங்கள். தொழில் வியாபாரம் மந்தமாக தான் காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் சிக்கலில் இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலைப்பளுவும் கூட ஏற்படலாம்.
பொருட்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.