Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…பிள்ளைகளால் நற்செய்தி வரும்… சேமிப்பு உயரும்…

 

சிம்மம் ராசி அன்பர்களே …!   குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் மதிக்க கூடிய அளவில் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம்  மன அழுத்தம் கொஞ்சம் அதிகரிக்கலாம்.

கோபத்தை எப்பொழுதுமே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். சரியான நேரத்திற்கு சரியான செயல்கள் கண்டிப்பாக நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே கோபத்தை விட்டு விட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உற்றார் உறவினரிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

அவர்கள் உதவிகள் கேட்டு வருவார்கள் அந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் மன சங்கடத்துக்கு ஆளாக கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |