Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…சிக்கல்கள் கொஞ்சம் உண்டாகும்…பதவி உயர்வு கிடைக்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!    இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தனவரவு மிகச்சிறப்பாக இருக்கும். கட்டிட பணியை தொடங்கும் எண்ணம் உருவாகும். பஞ்சாயத்துக்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெரும். மாற்று மருத்துவம் உடல் நலத்தை சீராக்கும். வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் சக ஊழியர்களுடன் சந்தேகம் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.. பணத்தை அதிக அளவில் செலவழிக்க வேண்டாம்.

சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். பழைய சிக்கல்கள் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டுகள் கிடைக்கும். திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் சிறு தடைகள் இருக்கும். அதை பற்றி கவலை வேண்டாம். அது மதியத்திற்கு மேல் சரியாகிவிடும். எதிர்பாராத செலவுகள் மட்டும் கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும்.

செலவை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |