சிம்மம் ராசி அன்பர்களே …!! இன்று இழுபறியாக இருந்து காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும். செயல் நிறைவேற கொஞ்சம் தாமதமானாலும் நல்லபடியாக நடந்து முடியும் சிறிய பணி கூட அதிக சுமை போல தோன்றும் கவலை வேண்டாம்.சமயோசிதமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதலாக பணிபுரிவீர்கள்.
சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் தயவுசெய்து பணத்தையும் நகையையும் கடனாகக் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் சில்லறை சண்டைகளும் பூசல்களும் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் வந்து செல்லும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை கூட வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். வெள்ளை நிறம் அதிஷ்டத்தையே கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்