சிம்மம் ராசி அன்பர்களே …! இன்று தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை பெறமுடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை மென்மையாக அபிவிருத்தி செய்யமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும் வெற்றியையும் பெற முடியும். இன்று உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறந்தோர் இடம் விட்டுக்கொடுத்து போவது உத்தமம். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.
கடித போக்குவரத்து அனுகூலமான பலனையே கொடுக்கும். பயணம் ஓரளவில் இன்று லாபத்தை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவரின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொண்டு, சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாகத் தான் செல்ல வேண்டும். அதே தான் கொடுக்கல் வாங்கலிலும் கொஞ்சம் கவனமாக இருந்தால், போதுமானதாக இருக்கும்.
நிதி மேலாண்மை பொறுத்தவரை ஓரளவே முன்னேற்றம் இருக்கும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்