Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…” காதலில் வயப்படக்கூடிய சூழல்”….பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்….!!

சிம்ம ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் சிவ பெருமான் வழிபாட்டை தொடங்கி இன்றைய காரியங்களைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்று விரிவடையும். உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விட கூடிய சூழல் இருக்கு.

உங்களுடைய உடலிலும் இன்று வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கு. எதிர்பார்த்த உதவி உங்களுக்கு சரியான நேரத்திற்கு வந்து சேரும். பொருட்களை மட்டும் கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள் அது போதும். சரியான பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். தேவை இல்லாத பொருட்களை வாங்கி செலவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்.

இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே அன்பும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |