Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”அடுத்தவர் மீது நம்பிக்கை குறையும்” உடல் ஆரோக்கியம் பாதிப்படையும் …!!

சிம்ம ராசி அன்பர்களே….!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை தாமதமின்றி சரி செய்வது நல்லது. முக்கிய செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் இருக்கும். இன்று கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் குழப்பம் ஏற்படும்.

உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். உத்தியோகத்தில் உயர்வு பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனையே கொடுக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனநிம்மதி உண்டாகும். அரசாங்க காரியம் அனுகூலத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் இன்று பாதிக்கப்படலாம். ஆகவே கொஞ்சம் கவனமாக இருங்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் நீங்கள் எள் கலந்த சாதத்தை அன்னமாக காக்கைக்கு கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று அதிஷ்ட திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |