Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு… ஆரோக்கியம் சீராகும்… இடமாற்றம் கிடைக்கும்…!!

சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணம் தர வேண்டியவர்கள் வீடு தேடி வந்து கொடுப்பார்கள். தேக ஆரோக்யம் சீராக இருக்கும். கடிதப் போக்குவரத்து கவலையைப் போக்கும்.  திருமணத்தடை விலகி செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்தியாகவே நடந்து முடியும். எதிர்பார்த்த  இடமாற்றங்கள் வரலாம். வீடு மாற்றும் சிந்தனைகள் மேலோங்கும்.  இன்று உங்களுடைய கருத்துக்களுக்கு அனைவரும் முன்னுரிமை கொடுப்பார்கள். அதனால் உங்கள் வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் ஏற்படும்.

எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் காரியத்தில்  மட்டும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பீர்கள். சில காரியங்களில் அலட்சியம் இருக்கும். அதையும் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். செய் தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பரிமானம் ஏற்படும் .தொழிலை விரிவுபடுத்த கூடியை எண்ணங்களும் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் மேம்படுவதற்கும் சிறப்பாகவே நீங்கள் செயல்படுவீர்கள்.

பேச்சில் மட்டும் எப்பொழுதுமே கடுமை காட்டாமல்  நடந்து கொண்டாலே போதுமானதாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு  கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு திசை

அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |