சிம்மம் ராசி அன்பர்களே, இன்று உத்தியோக முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாகவே இருக்கும். உயர் அதிகாரிகளினால் நன்மை ஏற்படும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்க வெற்றி காண்பீர்கள். சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். மனக்குழப்பம் தீரும், எதையும் ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து செய்வீர்கள். பயணங்கள் நல்ல பலனை கொடுப்பதாகவே அமையும்.
புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள், தொலைதூரத்திலிருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்கள் ஆகவே வரும். வெளியூர் பயணம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதால், வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். வெளிநாடு செல்வதற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். இன்று மாணவர்கள் செல்வங்களுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் காணப்படும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
மேற்கல்வி கல்வியிலும் வெற்றி பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்