சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று எவரிடமும் நிதானித்து பேசுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பொருட்களை யாரிடமும் இரவலாக வாங்க வேண்டாம். பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று வேலையில் இழுபறி வீண் அலைச்சல் போன்றவை ஏற்பட்டு நீங்கும் கவனமாக இருங்கள். எல்ல நன்மைகளும் ஓரளவு வந்து சேரும், காரியத்தில் வெற்றி இருக்கும், எதிர்ப்புகள் விலகி செல்லும். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டு பின்னர் நீங்கும்.
தேவையற்ற மனக்கவலை கொஞ்சம் இருக்கும் அதை மட்டும் பார்த்துக்கோங்க. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படலாம். பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகளை செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். கூடுமானவரை இன்று கொஞ்சம் பொறுமையை கடைபிடியுங்கள் யாரிடமும் பணத்தை கடனாகப் பெறாதீர்கள், அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்றய நாள் முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மனம் நிம்மதியாக காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இடத்தை தானஇன்று லட்சுமி வழிபாட்டை செய்து 7 பேருக்கு தயிர்சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீலம்