Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்..திறமையாக பேசி காரியத்தை சாதித்து கொள்வீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற காரியங்கள் அனைத்துமே இன்று முழுமை அடையும். பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். வியாபாரம் தொழில் மூலம் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

அதேபோல வாடிக்கையாளர்கள் உங்களுக்கு புதிதாக கிடைப்பார்கள். அவரிடம் நீங்கள் திறமையாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் விரிவாக்கத்தை செய்யலாமா என்ற எண்ணங்களையும் நீங்கள் செயல்படுத்துவீர்கள். புதிய திட்டங்கள் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் என்று நாம் சொல்லலாம். புதுத் தொழிலில் முதலீடு செய்யும்போது மட்டும் கவனமாக இருங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள் ஒன்றும் தவறு இல்லை, முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு நிம்மதியாக இருக்கும்.

இன்று மாணவச் செல்வங்கள் மட்டும் கொஞ்சம் கடினமாக  தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். முயற்சி செய்யுங்கள், கனிவாக நடந்து கொள்ளுங்கள். ஆசிரியர்களின் அன்பு உங்களுக்கு முழுமையாகவே கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்டமான  திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்

Categories

Tech |