சிம்மம் ராசி அன்பர்களே, இன்று ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை நீங்கள் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டும். எதையும் ஒரு முறைக்கு, பல முறை யோசித்து செய்யுங்கள். நண்பர்கள் வழியில் மாற்றம் ஏற்படும்.பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியத்தை கொடுக்கும். மனக்குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் பொழுது நிதானம் இருக்கட்டும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் இருக்கும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றியை கொடுக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் இருக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையை இன்று இருக்கும். கூடுமானவரை நண்பர்களிடம் மட்டும் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவ செல்வங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல், கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்