சிம்மம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு நன்மைகள் நடக்கும் நாளாகவே இருக்கும். உங்களுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். நல்ல பலன்கள் கிடைக்கும். அக்கம்பக்கத்தாரிடம் அதிகம் அன்பு பாராட்டக் கூடும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி சிறப்பாகவே இருக்கும். பணவரவும் திருப்திகரமாகவே இருக்கும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். இன்று பிரச்சனைகள் அற்ற நாளாகவே இருக்கும். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள்.
சிலரது காரியங்கள் உங்களுக்கு வெறுப்பை உண்டாகலாம். அதனால் நீங்கள் கொஞ்சம் கோபம் அடையலாம். எந்த விஷயங்களையும் தீர விசாரித்து பேசுவது நன்மையை கொடுக்கும். அதே போல நீங்கள் செய்யக் கூடிய காரியங்களில் கூட எந்தவித அலட்சியம் காட்டாமல் செய்வது ரொம்ப நல்லது. இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாகத்தான் இருக்கும், காதல் கைகூடும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லாமல் முன்னேற்றமாக செல்வார்கள்.
இன்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாகவே நீங்கள் கையாளக் கூடிய சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை