சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பழைய பாக்கிகள் வசூலாகும் நன்றாக இருக்கும் .பணிநிரந்தரம் பற்றிய தகவல்கள் உண்டாகும் .சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் .பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். பிள்ளைகள் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்தவேண்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று கொஞ்சம் பொறுமையைக் கையாளுங்கள் .அது போதும் .மற்றவர்கள் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இன்று யாரிடமும் எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்
. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும் .
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமானஎண் : 6 மற்றும் 7
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்