Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“சிம்ம ராசிக்கு”…..ஆதரவு பெருகும் ….மகிழ்ச்சி பொங்கும்….

 சிம்ம ராசி அன்பர்களே….!!!! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக  பேசுபவரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில்  வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும்.  பிள்ளைகள் வெகுநாள் கேட்ட பொருளை இன்று  வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று  கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.

வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும்.  பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், அதனால் நன்மையும் ஏற்படும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் வேலைப்பழு காரணமாக அலைய  வேண்டியிருக்கும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம்  உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் உங்களுடைய காரியங்கள் அனைத்துமே நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான  திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |