Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“சிம்ம ராசிக்கு”…நிதானம் தேவை…. கவனம் வேண்டும்….!!!!

சிம்மம் ராசி அன்பர்களே…!!! இன்று வருமானம் வரும் வழியை கண்டு கொள்ளும் நாளாக இறக்கும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பொதுநல ஈடுபாடு ஆர்வம் ஏற்படும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். இன்று  பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும்.

ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது சிறப்பு. நண்பர்கள் உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று பணம் உதவி வந்து சேரும். எதிலும் கவனம் இருக்கட்டும். இன்று கூடுமானவரை மற்றவரிடம் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் உங்களுக்கு எப்பொழுதுமே உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்.  அனைத்து  காரியங்களும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

Categories

Tech |