“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” இந்த பழமொழியின் விளக்கம் அனைவரும் அறிந்ததே. அழகு என்பது அவரவர் குணம் சார்ந்தது என்று சொல்வது உண்மை தான். இருப்பினும் அதை யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை.
இயற்கையிலேயே இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம் செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம் போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது.
அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும். நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகளை தெரிந்து கொள்வோம் …!
சருமம் அழகாக அழகு குறிப்புகள் – ரோஸ் வாட்டர்:
ரோஸ் வாட்டர் சரும அழகை அதிகரிக்க மிகவும் பயன்படுகின்றது. இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத(பிரெஷ் மில்க்) பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
பின்பு பத்து நிமிடம் கழித்து சருமத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சரும செல்கள் புத்துணர்ச்சி அடையும் . இதனால் என்றும் சருமம் அழகாக, மென்மையாகவும் காணப்படும்.
சருமம் சிவப்பாக அழகு குறிப்புகள் – எலுமிச்சை சாறு:
இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் இரவில் செய்து வர, சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் அகலும். அதேபோல் என்றும் சருமம் சிவப்பாக இருக்கும்.
சருமம் அழகாக அழகு குறிப்புகள் – வெள்ளரிச்சாறு:
வெள்ளரிக்காய் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டது, எனவே இரவு தூங்குவதற்கு முன், வெள்ளரிச்சாறில் சிறிதளவு காய்ச்சாத பால் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வர, என்றும் சருமம் சிவப்பாக காணப்படும்.
சருமம் பளபளப்பாக அழகு குறிப்புகள் – உருளைக்கிழங்கு சாறு:
உருளைக்கிழங்கில் உள்ள பிளிச்சிங் தன்மை சருமத்தில் உள்ள கருமையை அகற்ற பெரிதும் உதவுகின்றது.
எனவே இரவு தூங்குவதற்கு முன் உருளைக்கிழங்கில் சாறு எடுத்து அவற்றை சருமத்தில் அப்ளை செய்து, பின்பு ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வர என்றும் சருமம் பளபளப்பாக காணப்படும்.
சருமம் மென்மையாக அழகு குறிப்புகள் – பட்டை பொடி:
அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்ய வேண்டும்.
பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம் மென்மையாக காணப்படும்.
முகம் பளபளப்பாக அழகு குறிப்பு – தயிர்:
தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும், பின்பு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வர என்றும் சருமம் பொலிவுடன் காணப்படும்.
முகம் பளபளப்பாக அழகு குறிப்பு – தேங்காய் நீர்:
தேங்காய் நீரை இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில், அப்ளை செய்யுங்கள், பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வர என்றும் முகம் பளபளப்பாக இருக்கும்