அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் சிம்பிள் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
முன்னணி நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதை தொடர்ந்து நடித்து வந்த அவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அவருக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.தற்போது அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அனிகா அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதேபோல அவர் தற்போது சிம்பிளான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப் புகைப்படத்தில் அவர் கடற்கரையோரத்தில் நடந்து செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த அழகிய புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து வருகின்றனர்.