Categories
தேசிய செய்திகள்

கண்களை பாதுகாக்க எளிய டிப்ஸ்…. நடிகை ஷில்பா ஷெட்டி வெளியிட்ட பயிற்சி வீடியோ…. இதோ நீங்களே பாருங்க….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் அடிக்கடி உடல் ஆரோக்கியங்கள் தொடர்பான அறிவுரைகளை கூறி வருவதோடு யோகாசனங்களையும் மக்களுக்காக செய்து காட்டுகிறார். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் நிலையில் தற்போது கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக ஒரு புதிய யோகாசனத்தை எப்படி செய்வது என்று வீடியோவுடன் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் கணினி மற்றும் செல்போன் போன்றவற்றால் கண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், நம் வாழ்க்கைக்கு முக்கியமான உடல் உறுப்பான கண்களை பாதுகாப்பது அவசியம் என்றும் கூறி கண்களை மேலே உருட்டி உருட்டி ஒரு யோகாசனத்தை செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |