பிரபல சீரியல் நடிகை யான சிம்ரன் கண்ணா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார் என்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை பூர்வீகமாக கொண்ட சிம்ரன் கண்ணா மாடல் இயக்குனர் நடிகை பாடகி என பல முகங்களை கொண்டவர். உதான்: சப்னோ கி, மாதா கி சவுகி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சிம்ரன் கண்ணா தனது 35 வயதில் கடந்த 2000 ஆண்டில் தொழிலதிபர் பரத்தை திருமணம் செய்துகொண்டார்.
இத்தம்பதியினருக்கு வினித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிம்ரன் கண்ணா பரத் தம்பதி இடையே விரிசல் ஏற்பட்டது. இது தொடர்பான செய்திகள் வெளியானாலும் இருவரும் இது குறித்து எதுவும் பேசாமல் இருந்தனர். இந்நிலையில் பரத்தை விட்டு பிரிந்து இருந்த சிம்ரன் கடந்த 13ஆம் தேதி கணவர் பரத்தை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
அதோடு தங்களுக்குள் ஏற்பட்ட இந்தப் பிரிவு இணக்கமானது என்றும் எங்களிடையே வேறு எந்த விரோதமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அதோடு மகன் வினித் தந்தையுடன் இருப்பதாகவும் மகனை அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.