Categories
உலக செய்திகள்

சீன மொழிக் கல்வி திட்டம்…. தைவானுக்கு மாற்றிய பல்கலைக்கழகம்…. வெளிவந்த தகவல்….!!

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்தி வரும் சீன மொழிக்கல்வி திட்டத்தை அங்கிருந்து தைவானுக்கு மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்தி வரும் சீன மொழிக்கல்வி திட்டத்தை அங்கிருந்து தைவானுக்கு மாற்றியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் அங்கமாக கருதி வரும் சீனா தங்களை மீறி அந்தப் பிராந்தியத்துடன் பிற நாடுகள் தொடர்பு கொள்வதை கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் இந்த முடிவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியதாவது “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சீன மொழிக்கல்வி திட்டத்தை பெய்ஜிங்கில் இருந்து தைவான் தலைநகர் தைபேவுக்கு ஐவி அமெரிக்க பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மாற்றியுள்ளது.

அந்த திட்டத்தை செயல்படுத்தும் பெய்ஜிங் மொழி மற்றும் கலாச்சார பல்கலைக்கழகம் வெளிப்படுத்தி வரும் நட்புணர்வற்ற தன்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்நாட்டை  எங்களுடன் மீண்டும் இணைத்துக் கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும், தேவைப்பட்டால் ராணுவ பலத்தையும் பயன்படுத்துவோம் என சீனா கூறுகிறது. மேலும் தைவானில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிரிவினைவாதிகள் என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது. அதன்பின் தைவானோ தாங்கள் ஏற்கனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதால் சீனாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றும் கூறி வருகிறது.

Categories

Tech |