Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருக்கும் போது…. சினை மாட்டுக்கு நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்த சினை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு சொந்தமான சினை மாடு அதே கிராமத்தில் வசிக்கும் சண்முகம் என்பவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டியின் மீது  ஏறி நடந்த போது எதிர்பாராதவிதமாக மூடி உடைந்ததால் சினை மாடு 20 அடி ஆழ தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டது. அதன் பின் சினை மாட்டின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த சினை மாட்டை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் கழிவுநீர் தொட்டியின் அகலம் 2 அடி மட்டுமே இருந்ததால் மாடு சுருண்ட நிலையில் உள்ளே கிடந்துள்ளது. இதனையடுத்து சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கழிவுநீர் தொட்டியில் விழுந்த சினை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதனால் தீயணைப்பு வீரர்களை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

 

Categories

Tech |