மின்னல் தாக்கி மாடு உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள பரமகவுண்டனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த மாடு சினையாக இருந்த நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள ஆலமரத்தின் அடியில் அதனை கட்டி வைத்துள்ளார். அந்த சமயம் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மலை பெய்துள்ளது.
அப்போது மின்னல் வெட்டியதில் மரத்தில் கட்டபட்டிருந்த மாடு உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் இறந்த மாட்டை பரிசோதனைக்காக அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.