சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை (டிச.23) சீனாவில் இருந்து தில்லி வழியாக இந்தியா திரும்பிய உத்திரபிரதேசம் ஆக்ராவை சோ்ந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆக்ரா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அருண் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபா் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளாா். அவருடைய குடும்பத்தினா் மற்றும் அவருடன் தொடா்பிலிருந்த நபா்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.